டிவிஎஸ் மோட்டார்சைக்கிள் மாடலுக்கு அந்நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு அசத்தலான சலுகையை அறிவித்து உள்ளது.
கொரோனா ஊரடங்கை தொடர்ந்து ஆட்டோமொபைல் துறை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், பண்டிகை காலத்த்தில் வியாபாரத்தை அதிகரிக்க பல நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன.
அந்த வகையில் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது பிஎஸ்6 ரேடியான் மோட்டார்சைக்கிள் மாடலுக்கு பண்டிகை கால சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய டிவிஎஸ் ரேடியான் மாடலில் 109.7சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 8.08 பிஹெச்பி பவர், 8.7 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் விலை ரூ. 60,442 மற்றும் ரூ. 66,442 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், தற்போதைய புதிய அறிவிப்பின்படி டிவிஎஸ் ரேடியான் மாடலை ரூ. 1999 எனும் மாத தவணையில் 6.99% வட்டியுடன் வழங்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிளுக்கு ரூ. 14,999 முன்பணத்தில் வாங்கிட முடியும். மேலும் இதற்கென ரூ. 5ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.