15லட்சம் கோடி சொத்து மதிப்பை அடைந்த உலகின் முதல் நபர் என்ற சிறப்பை பெற்றார் அமேசான் நிறுவனர்…

உலகிலேயே  200 பில்லியன் டாலர் அளவிற்கு நிகர சொத்து மதிப்புள்ள முதல் நபராக அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸ் முன்னேறியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன பல்வேறு நிறுவனங்கள் முடங்கி போய் உள்ளன ஆனால் ஒரு சில நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றுள்ளது.

அந்த வகையில் ஆன்லைன் வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கும் அமெரிக்காவை சேர்ந்த அமேசானின் பங்குகள் தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகின்றன. கடந்த 26 ஆம் தேதி அமேசான் பங்கு விலை 2.3 சதவிகிதம் அதிகரித்து  சுமார் 2 லட்சத்து 57 ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது.

இதனால் அதன் நிறுவனர் ஜெஃப் பிசோஸின நிகர சொத்து மதிப்பு  Nike, McDonald’s ,Pepsi ஆகிய பன்னாட்டு நிறுவனங்களின் மதிப்பை விடவும் அதிகரித்துள்ளது.இதன்மூலம் அவரது சொத்து 200 பில்லியன் டாலர்கள் இந்திய மதிப்பில் 15 லட்சம் கோடியை எட்டியுள்ளது, அதாவது உலகின் இரண்டாவது பெரிய பணக்காரரான பில்கேட்சை விடவும் சுமார் 6 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அதிகமாகும்.

Exit mobile version