தொடர்ந்து சரியும் தங்கம் விலை…மகிழ்ச்சியில் மக்கள்!

தொடர்ந்து தங்கம் விலை சரிவை கண்டுள்ளதை அடுத்து இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரங்களை பார்ப்போம்.

இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை உயர்ந்து வந்ததை அடுத்து கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை சரிந்து வருகிறது.

இது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 48 ரூபாய் குறைந்து விலை ரூ.4,608 ஆக உள்ளது. நேற்றைய விலை ரூ. 4,656 என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல 8 கிராம் ஆபரண தங்கம் 384 ரூபாய் குறைந்து ரூ. 36,864க்கு விற்பனை ஆகிறது. இதன் நேற்றைய விலை ரூ. 37,248 ஆகும். வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 70.60 என விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ. 69.70க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 69,700க்கு விற்பனை ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Exit mobile version