குறைந்தது தங்கம் விலை…மகிழ்ச்சியில் மக்கள்!

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரங்களை பார்ப்போம்.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை தற்போது குறைந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 4,664 ஆக உள்ளது. நேற்றைய விலை ரூ. 4,675. நேற்றைய விலையை விட இன்று ரூ. 11 குறைந்துள்ளது. அதேபோல, 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை இன்று ரூ. 88 ஆக குறைந்து ரூ. 37,312 ஆக உள்ளது.

நேற்று இதன் விலை ரூ. 37,400 ஆகும். தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்தது.

இன்று அதன் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 71.40க்கு விற்பனை ஆகிறது. நேற்று ரூ. 72.40க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 71,500 ஆக விற்பனைக்கு வந்துள்ளது.  

Exit mobile version