மகிழ்ச்சியான செய்தி தங்கம் விலை இன்றும் சற்று குறைந்தது!!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.160 குறைந்தது.
ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.42920 உள்ளது…

தமிழக பெண்களுக்கு தங்கம் பிடித்தமான ஒன்றாகும். தங்க நகைகளை ஆபரணமாக போட்டு அழகு பார்ப்பதில் பெண்களுக்கு அலாதி பிரியம். தற்போது இருக்கும் பொருளாதார சூழ்நிலையில் தங்கத்தின் மீதான முதலீடு மிகவும் பாதுகாப்பான ஒன்றாகும். இதனால் நடுத்தர வர்க்ககத்தினர் தங்கத்தின் மீது அதிகம் முதலீடு செய்கின்றனர். இதன் காரணமாக தங்கத்தின் விலை நாள்தோறும் அனைத்து தரப்பு மக்களாலும் உற்று நோக்கப்படுகிறது. நாளுக்கு நாள் தங்கத்தின் விலையானது புதிய உச்சத்தை அடைந்து கொண்டே செல்கிறது.

அந்த வகையில் சென்னையில் இன்றைய 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் 1 க்கு நேற்றைய விலையை விட 20 ரூபாய் குறைந்து 5365 ரூபாய்க்கும், ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை 42920 ரூபாய்க்கும், அதே போல் 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் 1 க்கு 5633ஆகவும், 10 கிராம் தூய தங்கத்தின் விலை 56330 ரூபாய்க்கும், வெள்ளியை பொறுத்தவரை கிராம் 1க்கு 83 ரூபாய் 40 பைசாவுக்கும் 1 கிலோ வெள்ளி 83400 ரூபாய்க்கும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

Exit mobile version