வருமான வரி தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்

வருமான வரி தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும்.

2021-2022ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி விவரங்கள் தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் (ஜூலை 31)என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தற்போது வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் எக்காரணத்தை கொண்டும் நீட்டிக்கப்படாது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அதன்படி, ₹5 லட்சத்திற்கும் குறைவாக வருமான வரித் தாக்கல் செய்பவர்களுக்கு ₹1,000ம், ₹5 லட்சத்திற்கு அதிகமாக வருமான வரித் தாக்கல் செய்பவர்களுக்கு ₹5,000ம் அபராதமாக விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பா.ஈ.பரசுராமன்.

Exit mobile version