கடந்த நிதியாண்டில் மட்டும் 5 கோடி புகார்கள்

கடந்த நிதியாண்டில்  மொபைல்போன் சேவைகள் தொடர்பாக 5 கோடிக்கும் அதிகமான புகார்கள் பெறப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இவ்வாறு பெறப்பட்ட புகாரில் 54% புகார்கள் ஏர்டெல் நிறுவனத்தின் மீது மட்டுமே பதிவாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.2 கோடியே 99 லட்சம் புகார்கள் ஏர்டெல் மீதும், 2 கோடியே 17 லட்சம் புகார்கள் வோடபோன் ஐடியா மீதும் கூறப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர் தேவுசிங் சவுகான் தெரிவித்துள்ளார்.இதேபோல், ரிலையன்ஸ் ஜியோ மீது 25 லட்சத்து 80 ஆயிரம் புகார்களும், பிஎஸ்என்எல் மீது 8 லட்சத்து 80ஆயிரம் புகார்களும் பெறப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 5.5கோடி புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகார் மையங்களில் பெறப்படும் புகார்கள் சம்மந்தப்பட்ட சேவை வழங்கும் நிறுவனங்களால் சரிசெய்யப்படுகின்றன. அவ்வாறு புகார்கள் தீர்க்கப்படாவிட்டால் தொலைத்தொடர்பு துறையின் மக்கள் குறைதீர் பிரிவை அணுகி புகார் அளிக்கலாம். அங்கு பெறப்படும் அனைத்து புகார்களும் பொதுக்குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு (CPGRAMS) போர்டல் மூலம் கண்காணிக்கப்பட்டு தீர்க்கப்படும். கடந்த நிதியாண்டில் இந்த போர்டலில் 58,911 புகார்கள் பெறப்பட்ட நிலையில் அவற்றில் 58,224 புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version