சுதந்திர தின விழாவிற்கு பொதுவிடுமுறை அளிக்காத 158 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நாட்டின் 76வது சுகந்திர தின விழா நாடு முழுவதும் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சுதந்திர தின அமுதப்பெருவிழாவாக நாடு முழுவதும் இல்லங்கள் தோறும் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மக்கள் சிறப்பாக கொண்டாடினர். சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பொதுவிடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் பொதுமுறை விடப்படாத ஹோட்டல்கள், தனியார் நிறுவனங்களில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது மதுரை மாவட்டத்தை சேர்ந்த 158 வணிக நிறுவனங்கள் உரிய அனுமதியின்றி அரசு உத்தரவை மீறி ஊழியர்களை வைத்து பணி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இந்த நிறுவனங்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ₹3 லட்சத்திற்கு அபராதம் விதித்து தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மைவிழி செல்வராஜ் உத்தரவு பிறபித்தார்.
