சென்னையில் 2வது நாளாக டீசல் தட்டுப்பாடு

சென்னையில் தொடர்ந்து 2வது நாளாக டீசல் தட்டுப்பாடு நிலவி வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் & சமையல் எரிவாயு விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹102.63க்கும், ஒரு லிட்டர் டீசல் ₹94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், சென்னையில் உள்ள பல பெட்ரோல் பங்குகளில் ’டீசல் இல்லை’ என்ற அறிவிப்பு பலகையை வைத்துள்ளனர்.

டீசல் போடுவதற்காக, பெட்ரோல் பங்கிற்கு வரும் வாடிக்கையாளர்கள் இந்த அறிவிப்பு பலகையை பார்த்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர். இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரி கூறும்போது, கச்சா எண்ணெய் வரத்துக் குறைவு, விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் டீசல் திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது தற்காலிகமானதுதான். இந்த பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும் என்றார்.

Exit mobile version