Airtel 5 G சேவை விரைவில் அறிமுகம்!

இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் முக்கிய நகரங்களில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கோபால் விட்டல் தெரிவித்ததாவது: சில வாரங்களில் எங்களின் அடுத்த தலைமுறை தொழில்நுட்பமான 5ஜி சேவையை தொடங்க இருக்கிறோம். டிசம்பர் மாதத்திற்குள் முக்கிய பெருநகரங்களில் 5ஜி சேவை கிடைக்கும் வகையில் முயற்சி செய்து வருகிறோம். அதன்பிறகு நாடுமுழுவதும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும். 2023ம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் 5 ஜி சேவை கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

மார்ச் 2024க்குள் 5000 நகரங்கள் மற்றும் தாலுகாவில் ஏர்டெல் 5 ஜி சேவையை வழங்கும்.  இது 4ஜியை விட 30 மடங்கு அதிவேகத்தை வழங்கும். இதுபற்றி முழுமையான விவரங்களை அறிய Airtel Thanks Appஐ பயன்படுத்துங்கள். ஒரு வருடத்திற்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட போன்களில் எல்லாம் 5ஜி சிப்செட் இருக்கிறது. தங்களது போன்களில் 5ஜி சிப்செட் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வாடிக்கையாளர்கள் 4ஜி எல்டிஇக்கு கூடுதலாக 5ஜியை தேர்வு செய்யலாம். இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிலையில், இதற்கான கட்டணத்தொகைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், 5ஜி வருகையால் ரீஜார்ஜ் கட்டணங்கள் உயரக்கூடும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version