இன்றைய தங்கம்-வெள்ளி விலை நிலவரம்!

சென்னையில் இன்று தங்கம்-வெள்ளி விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.

இந்த புதுவருடம் ஆரம்பித்ததில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து ஏற்றத்தில் உள்ளது. அந்த வகையில், சந்தையில் நேற்றை விட இன்று தங்கத்தின் விலை ரூ. 208 உயர்ந்துள்ளது.

இந்த வாரத்திலேயே தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 4,841ஆக உள்ளது. நேற்றைய விலை ரூ. 4,815 என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் விலை கிராமுக்கு 26 ரூபாய் அதிகமாகியுள்ளது. அதேபோல, நேற்று ரூ. 38,520க்கு விற்பனையான 8 கிராம் ஆபரண தங்கம் இன்று 38,728க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 72.10க்கு விற்பனையானது. அதே போல ஒரு கிலோ வெள்ளி ரூ. 74,100க்கு விற்பனையாகிறது.

Exit mobile version