‘சில்லு கருப்பட்டி’, ‘ஏலே’, மற்றும் அமேசான் பிரைம் வீடியோவின் ஆந்தாலஜி தொகுப்பின் ஒரு பகுதியான ‘புத்தம் புது காலை விடியாதா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் தான் ஹலிதா ஷமீம். இவர் இயக்கத்தில் ‘மின்மினி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பானது கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது குழந்தைகளாக இருந்து இளம் பருவத்தினராக மாறும் கதாபாத்திரங்களைக் கொண்ட கதைகளம் என்பதால், 2014-ம் ஆண்டு குழந்தைப்பருவத்தில் இருந்த கதாபாத்திரங்களை இவர் படமாக்கிவிட்டார்.இப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார் என ஒரு தகவல் சமீபத்தில் வெளியாகி உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான ‘எந்திரன்’ படத்தில் இடம்பெற்ற ‘புதிய மனிதா’ என்ற பாடலில் ஒரு சிறிய பகுதியை கதீஜா பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் இடம்பெற்ற ‘சின்னஞ்சிறு நிலவே’ பாடலையும் கதீஜா பாடியுள்ளார். ‘மின்மினி’ திரைப்படத்துக்கு கதீஜா ரகுமான் இசையமைக்கிறார் என்பதை ஹலிதா ஷமீம் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அவரது ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளராக அவதாரம் எடுக்கிறார் இசைப்புயலின் மகள்
-
By mukesh

Related Content
" இது சுத்தமான அரசியல் சதி... " - கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் ... பின்னணியில் யார்?
By
Jansi
February 28, 2026
மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!
By
Jansi
January 28, 2026
கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்
By
daniel
December 17, 2025
பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு
By
daniel
December 13, 2025
சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!
By
daniel
November 26, 2025
ரி - ரீலிஸ்: அமர்க்களம்
By
daniel
November 20, 2025