பிரபலமான ஒரூ தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ், சம்யுக்தா மேனன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘வாத்தி’. இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசைக்கோர்வைகளை அமைந்து இருந்தார். சமீபத்தில் வெளியான இந்தபடமானது கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இப்படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் துல்கர் சல்மான் இணைந்துள்ளதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிப்புகள் வெளியானது. இந்த படத்தை சித்தாரா எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இணைந்துள்ளதாக படக்குழு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அறிவித்துள்ளது. துல்கர் சல்மான் உடன் ஜிவி பிரகாஷ் இணைந்துள்ளதால் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
துல்கருடன் இணையும் ஜீ.வி
-
By mukesh
Related Content
கருணாநிதி வேலையில்லாமல் இருந்தாரா?
By
daniel
November 27, 2024
தளபதி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த ஜல்லிக்கட்டு ஜலீல்!
By
daniel
September 8, 2024
அன்றே சொன்ன திலகபாமா; திண்டுக்கல்லில் திடீரென வேலையை ஆரம்பித்த திமுக!
By
daniel
August 30, 2024
விஜய் கட்சியின் புதிய கொடி
By
daniel
August 22, 2024
வேலூர் மக்களை ஏமாற்றினாரா மு.க.ஸ்டாலின்?
By
daniel
August 13, 2024
வைகோ கண்டனம்
By
daniel
August 9, 2024