இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகராகவும் கலக்கி வருபவர் தான் விஜய் ஆண்டனி இவர் சமீபத்தில் இயக்கி நடித்திருந்த ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படமானது கடந்த 19-ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒயி ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் ரூ.30 கோடிக்கு மேல் வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தப்படத்தின் வெற்றி விழா விசாகப்பட்டினத்தில் கடந்த மாதம் வெற்றிகரமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி, ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படமானது வருகிற 18-ஆம் தேதி ஹாட் ஸ்டார் மற்றும் ஓ.டி.டி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்த படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் வெளியாக தயாராக இருக்கிறது பிச்சைக்காரன் 2 திரைப்படம்
-
By mukesh

Related Content
தமிழகத்தில் சாலை விரிவாக்கத்துக்கு புதிய திட்டம்; 182 கோரிக்கைகளுக்கு விரிவான திட்ட அறிக்கை!
By
daniel
August 31, 2026
பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் நிவாரணம்; கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு!
By
daniel
August 31, 2026
ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!
By
daniel
August 31, 2026
“ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டில் சட்டமன்றம் உள்ளது” — எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
By
daniel
August 30, 2026
நேபாளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் மீட்பு!
By
daniel
August 30, 2026