
ஆஸ்கர் விருது வழங்கும் விழா மேடையில் பிரபல நடிகர் சிறந்த நடிகர் வில் ஸ்மித் கண்ணத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 2022 ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. சிறந்த ஆவணப் படத்துக்கான விருதை அறிவிப்பதற்கு பிரபல நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் மேடைக்கு வந்தார். அப்போது நகைச்சுவையாக பேசுகையில், வில் ஸ்மித்தின் மனைவி ஜாடாவின் சிகை அலங்காரத்தை மறைமுகமாக குறிப்பிட்டு கிண்டலடித்தார்.
இதனால் கோபமடைந்த வில் ஸ்மித், மேடையில் ஏறி கிறிஸ் ராக்கை கண்ணத்தில் அறைந்தார். பிறகு இருக்கைக்கு திரும்பிய அவர், இனிமேல் என் மனைவியின் பெயரை நீ குறிப்பிடக்கூடாது என்று உரத்த குரலில் கூறினார். இதனால் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.
