நடிகர் சிம்பு- 46 படத்தின் Motion poster குறித்த முக்கிய அட்டேட் ! டுவிட்டரில் டிரெண்டிங் ஆகும் ஹேஸ்டேக் #SilambarasanTR46

நடிகர்  சிம்பு- 46 படத்தின் Motion poster –ஐ இன்று நள்ளிரவு 12  மணிக்கு  வெளியிடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிம்புவின் படங்களில் சமீப காலமாக பெரிதாகப் போகவில்லை. இதுகுறித்த வருத்தம் அவரது ரசிகர்களிடம் உண்டு.

இருப்பினும் சிம்புவின் ரசிகர்கள் எப்போதும்  வேறு எந்த நடிகருக்கும் இல்லாத வகையில் ஐடிவிங் போல் செயல்பட்டு சிம்பு குறித்த அப்டேட்டுகளை அறிவிப்பார்கள். சிம்பு குறித்த அத்தனை செய்திகளையும் அப்டேட் செய்து பரபரப்பு ஏற்படுத்துவார்கள்.

இந்நிலையில் சமீபத்தி சிம்பு தனக்கெனத் தனி அக்கவுண்டை டுவிட்டர், இன்ஸ்டாகிரமில் தொடங்கி தனது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் சிம்புவின் தீவிர ரசிகரும் நடிகருமான மஹத் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று நள்ளிரவு 12;00 மணிக்கு சிம்புவின் -46 வது படத்தின் மோசன் போஸ்டர் வெளியிடப்படும் எனத்  அறிவித்துள்ளார்.

இதனால் உற்சாகமடைந்த சிம்புவின் ரசிகரக்ள் டுவிட்டரில் #silambarasan46 என்ற ஹேஸ்டேக் உருவாக்கி வைரலாக்கி வருகின்றனர்.

Exit mobile version