‘வலிமை’ அப்டேட் குறித்து மனம் திறந்த அஜித் தரப்பு!

நடிகர் அஜித்தின் ‘வலிமை’ படம் குறித்து நீண்ட நாட்களாக ரசிகர்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில் தற்போது அஜித் தரப்பு அது குறித்து பேசியுள்ளார்கள்.

’நேர்கொண்ட பார்வை’ படத்திற்கு பிறகு நடிகர் அஜித் மற்றும் இயக்குநர் ஹெச். வினோத் இணையும் கூட்டணி ‘வலிமை’.

இந்த படம் குறித்தான அப்டேட்டை ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் படக்குழுவிடம் கேட்டு கொண்டே இருந்தனர். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, போனி கபூர் படத்தை தயாரிக்கிறார். இடையில் படப்பிடிப்பு தளத்தில் அஜித்திற்கு காயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வர ஆரம்பித்தன.

READ MORE- #Thalapathy65 விஜய்யின் மாஸ் லுக்!

இந்த நிலையில்தான் அஜித் தரப்பில் இருந்து படம் தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் தெரிவித்திருப்பதாவது, ‘படப்பிடிப்பு தளத்தில் தனக்கு ஏற்பட்டிருக்கும் காயங்களை கூட பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடக்க வேண்டும் என்றும் கடுமையாக உழைக்கும் அஜித் அவர்களும், அனுபவமிக்க தயாரிப்பாளருமான திரு. போனி கபூர் ஆகிய இருவரும் ஒருங்கிணைந்து ‘வலிமை’ படத்தின் அப்டேட் குறித்து முடிவெடுத்து தகுந்த நேரத்தில் வெளியிடுவார்கள். முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள்’ என தெரிவித்துள்ளனர்.

Exit mobile version