அஜித்தின் ‘வலிமை’ படம் குறித்தான வெளியீட்டு விவரம் கிடைத்துள்ளது.
‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்கு பிறகு நடிகர் அஜித் இயக்குநர் ஹெச். வினோத்துடன் இணையும் படம் ‘வலிமை’.
கொரோனா காரணமாக தள்ளி போன படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. இதில் சில ஃபாரின் லொகேஷன் ஷூட் மட்டும் பாக்கியுள்ளதாம். இந்த போர்ஷன் சீக்கிரம் அஜித்தை வைத்து முடித்தவுடன் படம் ஆகஸ்ட்டில் வெளிவர அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
போன வருடம் அஜித்தின் பிறந்தநாளில் இருந்து ‘வலிமை’ பட அப்டேட்டை ரசிகர்கள் கேட்டு கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அனைத்து வேலைகளும் முடிந்து படம் ஆகஸ்டில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
READ MORE- ‘விஜய்தான் முழு காரணம்’- #Master குறித்து மனம் திறந்த விஜய்சேதுபதி!
படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘வலிமை’ மட்டுமில்லாமல், ரஜினியின் ‘அண்ணாத்த’ இந்த வருடம் நவம்பர் 4 அன்று அதாவது தீபாவளிக்கும், கமலின் ‘விக்ரம்’ டிசம்பரிலும், ‘ஆர்ஆர்ஆர்’ படம் அக்டோபரிலும் வெளியாகும் என்கின்றன கோலிவுட் வட்டாரங்கள்.
கடந்த வருடம் வெளியாக முடியாமல் போன படங்களுக்கும் சேர்த்து இந்த வருடம் கோலிவுட்டில் சினிமா ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்திருக்கிறது.