4 பிள்ளைகளை தத்தெடுத்துள்ளார் நடிகர் சோனு சூட்

உத்தரகாண்ட் வெள்ளத்தில் பலியானவரின் 4 பிள்ளைகளை நடிகர் சோனு சூட் தத்தெடுத்துள்ளார்.

கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சோனு சூட் என்ற வில்லன் நடிகர் செய்த பேருதவிகள் அவரை ரியல் ஹீரோவாக காட்டியது. தற்போதுவரை, தனது சமூக வலைதளங்களில் கோரிக்கை வைப்பவர்களுக்கு மருத்துவ உதவிகள், கல்விக்கான உதவிகள் செய்து வருகிறார் சோனு. சமீபத்தில் உத்ரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் தப்போவன் ஹைட்ரோபவர் திட்டத்தில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்த ஆலம் சிங் புண்டிர் என்பவர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தார். அவரது திடீர் இழப்பால் மனைவி உட்பட நான்கு பெண் குழந்தைகளும் பரிதவித்து போயினர். இந்நிலையில் சோனுசூட்டிடம் சமூக வலைதளங்களில் வைத்த கோரிக்கையை ஏற்று உயிரிழந்த ஆலம் சிங்கின் அஞ்சல், அந்தரா,காஜல், அனன்யா ஆகிய நான்கு பெண் குழந்தைகளின் படிப்புச் செலவை ஏற்றதோடு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளையும் செய்வதாக சோனு சூட் அறிவித்திருக்கிறார்.

Exit mobile version