ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ’மாஸ்டர்’ செல்ஃபி! #VIJYARULEDTwitter2020

தற்போது ட்விட்டரில் நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ செல்ஃபி ட்ரெண்டிங்கில் வந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் என பலரும் நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’.

இந்த வருடம் சம்மரில் ரிலீஸ் ஆக வேண்டியது ஆனால், கொரோனா சூழல் காரணமாக தள்ளி போனது. தீபாவளி அன்று படத்தின் டீசர் வெளியாக அதுவும் ட்ரெண்டிங்கில் இருந்தது. படப்பிடிப்பு நடந்த போது, நெய்வேலியில் ரசிகர்களுடன் விஜய் எடுத்த செல்ஃபி அப்போது ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தது. அந்த ஒரு விஷயத்தை தற்போது ட்விட்டர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதாவது இந்த வருடம் இந்திய அளவில் அதிகம் ரீட்வீட் செய்யப்பட்டது நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ செல்பி என தெரிவித்துள்ளது. எனவே, இதனை விஜய் ரசிகர்கள் #ThalapathyRuledTwitter2020 என்ற ஹேஷ்டேக்கில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

அதேபோல, அனுஷ்கா, விராட்டின் புகைப்படமும் இந்த வருடம் அதிகம் லைக் செய்யப்பட்ட புகைப்படமாக இருக்கிறது. மேலும் இந்த வருடம் அதிகம் பகிரப்பட்ட படங்களின் ஹேஷ்டேக்காக ‘தில் பேச்சாரா’, ‘சூரரைப்போற்று’ ஆகியவை முதல் இரண்டு இடங்களில் வந்துள்ளது.

இதைபோலவே கடந்த வருடம் விஜய்யின் ‘பிகில்’ ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version