லாக்டவுன் காலத்தில் எடை கூடிய நடிகை, ஆறுதல் கூறும் ரசிகர்கள் !

நடிகை பாவனா லாக்டவுன் காலத்தில் சற்று எடை அதிகமாக கூடியுள்ளார்.

கேரளாவை சேர்ந்த நடிகை பாவனா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். கன்னட தயாரிப்பாளரும் கேரள தொழிலதிபருமான நவீனை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பிறகு சமூகவலைத்தளங்களில் தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தனது உடல் எடை கூடிவிட்டதாக நடிகை பாவனா கூறியுள்ளார். மேலும் மிரர் செல்பி போட்டோவையும் அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த போட்டோவுக்கு அதிக லைக்குகள் வந்துள்ளன. இந்தப் படத்தைப் பார்த்த அவரது ஏராளமான ரசிகர்கள் நீங்கள் முன்பைவிட அழகாக இருக்கிறீர்கள் என்று கமெண்டுகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.

Exit mobile version