நடிகை மீனா மீண்டும் கர்ப்பம்..? அவரே வெளியிட்ட வீடியோ..!!

actress meena with daughter
actress meena family

இன்ஸ்டாகிராமில் நடிகை மீனா கர்ப்பமாக இருப்பது போன்ற வீடியோ வெளியிட்டுள்ளதை அடுத்து, அவர் மீண்டும் தாய்மை அடைந்துள்ளாரா என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் வித்யாசாகர் என்பவருடன் மீனாவுக்கு திருமணம் நடந்தது. தற்போது இந்த தம்பதியினருக்கு நைனிகா என்கிற மகள் உள்ளார்.

திருமணத்தை தொடர்ந்தும் தமிழ், மலையாளம், தெலுங்கு என சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். திருமணம் முடிந்து குழந்தைகள் பிறந்துவிட்ட பின்னும் பல்வேறு மொழிப் படங்களில் தொடர்ந்து ஹிட் கொடுத்து வரும் ஒரே நடிகையாக மீனா உள்ளார்.

மீனா தனது இன்ஸ்டாகிராமில் கர்ப்பிணியாக இருக்கும் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் பலரும் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாகவுள்ளதாக நினைத்துக் கொண்டார். ஆனால் அந்த வீடியோவில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், புதிய படத்துக்கான கெட்-அப் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கர்ப்பமாக இருக்கும் கதாபாத்திரங்களில் நடிக்கும் போது மிகவும் கணமான உடையை அணிவது வழக்கம். ஆனால் இப்போது மிகவும் எளிமையான எடை குறைந்த உடைகளை உடுத்த தருகின்றனர். இது மெய் சிலிர்க்க வைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version