நடிகை ஓவியா ட்விட்டரில் ‘Go Back Modi’ பதிவைக் கண்டித்து சைபர் கிரைமில் பாஜகவினர் புகார்!

நடிகை ஓவியா ட்விட்டரில் ‘Go Back Modi’ பதிவைக் கண்டித்து சைபர் கிரைமில் பாஜகவினர் புகாரளித்துள்ளனர்.

நேற்று மோடி வருகை தந்த நிலையில் நேற்று முன் தினமே நடிகை ஓவியா #GoBackModiஎன்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டார். வேறு பதிவுகள் ஏதும் பதிவிடாமல் ஹேஷ்டேக்கை மட்டுமே அவர் பதிவிட்டிருந்தார். அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் பதிலளித்திருந்தனர்.

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நேற்று சென்னைக்கு வருகை தந்தார். காலை 10.30 மணிக்கு சென்னை வந்தவர், நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு ரூ. 8,126 கோடி திட்டங்களை தொடங்கி வைத்தார். மதியம் கேரளா சென்றார்.  பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராகவும், ஆதரவாகவும் ட்விட்டரில் ஹேஸ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டது. #GoBackModi, #TnWelcomesmodi ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தன.

இந்நிலையில், நடிகை ஓவியாவுக்கு எதிராக பாஜகவினர் புகாரளித்துள்ளனர். தமிழக பாஜக ஐடி விங்க், சிபிசிஐடி சைபர் கிரைமில் புகாரளித்துள்ளனர். இறையாண்மைக்கு எதிராகவும் நடிகை ஓவியா செயல்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

Exit mobile version