அல்டிமேட் ஸ்டார் படத்தில் நடிக்கும் மெகா ஸ்டார்?

அஜீத் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படம் வேதாளம் இந்த திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் என அழைக்கப்படும் சிரஞ்சீவி நடிக்க விருக்கிறார்.

தெலுங்கில் முன்னணி நட்சத்திரமான மெகா ஸ்டார் சிரஞ்சீவி 2009 ஆம் ஆண்டு பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை ஆரம்பித்தார் அரசியலில் அவருக்கு போதுமான வரவேற்பு கிடைக்காததால், மீண்டும் திரைப்படத்தில் நடிப்புக்கு வந்துவிட்டார், அப்போது அவர் விஜய் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற கத்தி படத்தை ரீமேக் செய்தார் இந்த படம் 150கோடி வரை வசூல் செய்து சிரஞ்சீவிக்கு ஒரு கம்பேக் கொடுத்தது.


அடுத்ததாக நேரடி தெலுங்கு கதையில் நடிக்கலாம் என்று முடிவு செய்து சரித்திர படமான “சாய்ரா நரசிம்ம ரெட்டி”படத்தில் நடித்தார் இந்த படம் பெரும் தோல்வியை சந்தித்தது.

அதனால் அவர் ரீமேக் கதையை மட்டும் தேர்தேடுத்து நடித்து கொண்டு இருக்கிறார்.
மலையாளத்தில் மோகன் லால் நடித்து வெற்றி பெற்ற “லூசிபர்”திரைப்படம்,அதன் பிறகு அஜீத் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த “வேதாளம்” படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க விருக்கிறார் இந்த படத்தை A.M.ரத்னம் மற்றும் ராம்ச்சரண் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

Exit mobile version