நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் காவல் கட்டுபாட்டு அறைக்கு தெரிவித்துள்ளார்.
இன்று மதியம் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குப் போன் செய்த நபர் ஒருவர் நடிகர் அஜீத் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக பேசி இணைப்பை துண்டித்துள்ளார். இதனையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாயுடன் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் முதலமைச்சர் வீடு, ரஜினிகாந்த் வீடு உள்ளிட்ட பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் இருந்து வருவது வாடிக்கையாகி உள்ளது.