கோலிவுட்டை புரட்டி போட போகும் தல 61!!! இயக்குனர் இவர்தானா?

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நம் தல அஜித்குமார் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாட படும் ஒரு நாயகன் ஆவார். தனது ரசிகர் மன்றத்தை கலைத்தாலும் ஒவ்வொரு படத்தின் போதும் அவரின் ரசிகர்களின் வலிமை அதிகம் ஆகி கொண்டுதான் இருக்கிறது.
Ajith Kumar

இவர் நடிப்பில் கடைசியாக வந்த திரைப்படம் நேர்கொண்ட பார்வை இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் பெரும் வரப்பேற்பை பெற்றது, இந்த பட வெற்றிக்கு பிறகு மீண்டும் அதே கூட்டணியில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இப்படம் கொரொனா நோய் தொற்று காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று முடிந்ததும் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தல அஜித் எப்போதும் ஒரு படம் முடியும் வரை அடுத்த படத்தை தொடங்க மாட்டார், தற்போது வலிமை படத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

ஆனால், தன் கொள்கையை அஜித் சற்று மாற்றியுள்ளாராம், அஜித் தன் அடுத்த படத்தின் இயக்குனரை தேர்வு செய்துவிட்டார் என தகவல் கிடைத்துள்ளது அவர் யார் என்பதை இன்னும் 15 நாளில் தெரியவருமாம்.

Exit mobile version