இந்த படத்தில் மட்டும் தல நடித்து இருந்தால் படம் லெவலா இருந்து இருக்கும்!!!

தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத வசூல் மன்னனாக திகழ்பவர் நடிகர் அஜித் குமார் ஒரு நடிகர் என்பதை விட நல்ல மனிதர் என்ற நட்பெயர் பெற்றுள்ளார்.

தற்போது H.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார், கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப்பிறகு வலிமை படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் ராமோஜி பிலிம் சிட்டியில் ஆரம்பமாகியுள்ளது, அஜித் தற்போது தான் படப்பிடிப்பில் மிகவும் புதிய தோற்றத்தில் இணைந்துள்ளார்.

இந்த நிலையில் அஜித் கதையை தேர்வு செய்து நடிக்காமல் போன சூப்பர் ஹிட் படம், குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பிரபல இயக்குனர் சுரேஷ்  கிருஷ்ணா இயக்கத்தில் ரகுவரன் மற்றும் ராஜீவ் கிருஷ்ணா நடித்து சூப்பர் ஹிட்டான படம் ஆஹா. இந்த படத்தின் கதையை முதலில் அஜித்திடம் தான் கூறியுள்ளார்.

படத்தின் கதையை கேட்ட அஜித், கதை நன்றாக உள்ளது என்றும் ஆனால் தற்போது நிறைய படங்களில் கமிட்டாகி உள்ளேன். இதில் நடிக்க முடியாது என வருத்தத்துடன் கூறியுள்ளார்.

பின்னர் நடிகர்  ராஜீவ் கிருஷ்ணாவை  அஜித் சிபாரிசு செய்துள்ளார், இந்த தகவலை சுரேஷ் கிருஷ்ணா அண்மையில் ஒரு இணையதள சேனல் பேட்டியில் கூறியுள்ளார்.

Exit mobile version