டிவிட்டரில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையேயான மோதல் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த தீப்பொறி கிளம்ப பெண் ஒருவர் தான் காரணம்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அஜித் குடியிருக்கும் ஈஞ்சம்பாக்கம் வீட்டின் எதிர்புறம் உள்ள ஒரு தனியார் மருத்துவனையில் பணிபுரிந்து வந்தவர் பர்சானா.
கடந்த வருடம் நடிகர் அஜித் அந்த மருத்துவமனைக்கு உடல்நல பரிசோதனைக்காக சென்ற போது அஜித் ரசிகையான பர்சானா அவருடன் செல்பி எடுத்தார். அதோடு, அஜித்துடன் அவர் எடுத்துக்கொண்ட வீடியோவையும் வெளியிட்டார். அது கொரோனா காலம் என்பதால் அஜித்திற்கு கொரோனா என செய்திகள் பரவியது. எனவே, அப்பெண் வேலை நீக்கம் செய்யப்பட்டதாக தெரிகிறது.
அதன்பின் அஜித்தின் மனைவி ஷாலினி பரிந்துரைப்படி அப்பெண்ணுக்கு மீண்டும் வேலை கிடைத்தது. ஆனால், அவருக்கு எந்த பணியும் வழங்காமல் இருந்ததால் அவர் இதுபற்றி புகார் அளித்தார். எனவே, அவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.
மேலும், அவர் வங்கியில் வாங்கிய கடன் காரணத்தால் அவரின் கல்வி சான்றிதழ்களையும் மருத்துவமனை நிர்வாகம் தரவில்லை. இதற்கு அஜித் அனுப்பிய மெயிலே காரணம் என பர்சானா புகார் தெரிவித்து வந்தார்.
அந்த பெண்ணின் குழந்தையின் பள்ளியின் கல்வி செலவை அஜித் ஏற்பதாக அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்தார். ஆனால், அப்பணத்தை பள்ளியில் மட்டுமே கொடுப்போம் எனக்கூற அப்பெண் அதை ஏற்கவில்லை. அதோடு, சுரேஷ் சந்திரா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அதன்பின் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டதாக சுரேஷ் சந்திரா தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று அஜித்தின் வீட்டின் முன் பர்சானா தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது போலீசார் அவரை தடுத்து காவல்நிலையம் அழைத்து சென்றனர். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியானது.
இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தை தனக்காக பயன்படுத்திக் கொண்ட விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் #வாழவிடுங்க_அஜித் என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி அஜித்துக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து டிரெண்டிங் செய்தனர்.
எனவே, இதற்கு போட்டியாக விஜய் குடும்பத்தில் நடைபெற்று வரும் பிரச்சனைகளை குறிப்பிட்டு #பெத்தவர்ட்டபேசுங்கவிஜய் என்கிற ஹேஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.