“சினிமா சான்ஸ் இருக்கு… கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணு” ஸ்கீரின் ஷாட் போட்ட அனிதா சம்பத்!!

பட வாய்ப்பு தருவதாகக் கூறி இளம் பெண்களை தவறான பாதைக்கு அழைப்பவர்களையும் அட்ஜஸ்ட் செய்து கொள்ள சொல்பவர்களையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார் பிக் பாஸ் புகழ் அனிதா சம்பத்.

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்த அனிதா சம்பத் திடீரென மீம்கள் வாயிலாக சமூக வலைதளங்களில் பிரபலமானார். தொடர்ந்து, விஜய் டிவி-யில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பை ஏற்று வேலையை விட்டுவிட்டு ரூட்டை மாற்றினார். எதற்கெடுத்தாலும் அழுகை, கோபம் என ரசிகர்களிடம் நெகட்டிவ் கமெண்டுகளைப் பெற்றார். இருப்பினும் டாஸ்க்குகளில் நேர்மையுடன் விளையாடி மக்களின் ஆதரவையும் பெற்றார்.

நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆகி வெளியே வந்த அனிதாவுக்கு அவரது அப்பாவின் மரணம் பேரிடியாக அமைந்தது. அதிலிருந்து மீண்ட அவர், வழக்கம் போல தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துக்கொண்டு வருகிறார்.

தற்போது பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஷாரிக் ஹாசனுடன் இணைந்து நடனமாடி வருகிறார்.

இதற்கிடையே சமீபத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாகக் கூறி, இளம்பெண் ஒருவரை தவறான விஷயத்திற்கு ஒருவர் அழைத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் வந்த அந்த செய்தியை, அனிதா சம்பத்திற்கு அந்தப் பெண் பகிர்ந்துள்ளார். இதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அனிதா சம்பத், ”தோழி இந்த ஸ்கிரீன் ஷாட்டை அனுப்பினார். தயவு செய்து இந்த மாதிரி ஆட்களை நம்பாதீர்கள்” என படவாய்ப்பிற்கு முயற்சி செய்யும் இளம் பெண்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார்.

Exit mobile version