இணையத்தில் வெளியானது ‘அவதார் 2’ முழு படம் – அதிர்ச்சியில் படக்குழுவினர்..!

கேமரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. படத்தில் இடம்பெற்று இருந்த பண்டோரா கற்பனை உலகம் கண்கொள்ள காட்சியாக அமைந்தது. வசூலிலும் சாதனை நிகழ்த்தியது. 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது.

13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகம் ‘அவதார் தி வே ஆப் வாட்டர்’ என்ற பெயரில் தயாராகி ஆங்கிலம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட உலகம் முழுவதும் 160 மொழிகளில் நேற்று வெளியானது. இந்த நிலையில் அவதார் 2 படம் தியேட்டரில் திரையிடுவதற்கு முன்பே இணையதளங்களில் திருட்டுத்தனமாக கசிந்தது. இதனை பலரும் பதிவிறக்கம் செய்து பார்த்தனர்.

ரூ.2 ஆயிரம் கோடி செலவில் எடுத்த படத்தை திருட்டு இணையதளத்தில் பலரும் இலவசமாக பார்த்ததால் படக்குழுவினர் அதிர்ச்சியானார்கள். இதனால் வசூல் பாதிக்கப்படும் என்ற அச்சம் நிலவுகிறது. இன்னொரு சிக்கலாக அவதார் 2 படத்துக்கு வினியோகஸ்தர்கள் தரப்பில் அதிக பங்கு கோரியதால் தமிழ்நாட்டில் பல தியேட்டர்களில் இந்த படம் வெளியாகவில்லை. சென்னையில் உள்ள தியேட்டர்களில் வெளியானது.

Exit mobile version