அவதார் இரண்டாம் பாகத்தின் டீசர்- அதிகாரப்பூர்வமாக வெளியீடு..!!

avatar the way of water
avatar

உலக திரைப்பட ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள அவதார்- தி வே ஆஃப் வாட்டர் படத்தின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான ‘அவதார்’ படம் சினிமா உலகின் புதிய பாய்ச்சலை உருவாக்கியது. தொழில்நுட்ப பயன்பாடு, சினிமா உருவாக்குதல் பாணியில் இந்த படம் புதிய சிந்தனையை கொண்டு வந்தது.

அதை தொடர்ந்து 13 ஆண்டுகள் கழித்து அவதார் படத்தின் இரண்டாம் பாகம் இந்தாண்டு டிசம்பரில் வெளிவரவுள்ளது. முன்னதாக இந்த படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் அமெரிக்காவில் நடந்த நிகழ்வில் திரையிடப்பட்டது.

அதனுடைய லீக் காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி வந்தன. இந்நிலையில் டிஸ்னி நிறுவனம் அவதார் படத்தின் அதிகாரப்பூர்வ டீசரை வெளியிட்டுள்ளது. இரண்டாம் பாகம் வெளிவருவதற்கு முன்னதாக செப்டம்பர் மாதம் அவதார் முதல் பாகம் திரையரங்குகளில் மீண்டும் திரையிடப்படவுள்ளது.

Exit mobile version