’பாகுபலி ஹீரோ’ பிரபாஷுக்கு பிறந்தநாள்… டுவிட்டரில் தெறிக்கவிடும் ரசிகர்கள்

பாகுபலி  ஹீரோ பிரபாஸின் 41 வது  பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் டுவிட்டரில் ஹேஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்துள்ளனர்.

பாலிபலி -1,2 ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் உலக அளவில் பிரபலமானதுடன், இந்திய சினிமாவில் இன்றளவில் அதிக சம்பளம் வாங்கிவரும் நடிகர்களுள் முதன்மையானவர நடிகர் பிரபாஸ். இன்று அவர் தன் 41 வது  பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு சினிமா பிரபலங்கள், நடிகைகள்,  அரசியல் பிரபலங்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இதை முன்னிட்டு அவரது ரசிகர்கர்கள் டுவிட்டரில் #HappyBirthdayPrabhas என்ற ஹேஸ்டேக் உருவாக்கி இந்திய அளவில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே இவரது பிறந்த நாளை முன்னிடு ராதே ஸ்யாம் படத்தின் இயக்குநர் ராதே கிருஷ்ணா தனது டுவிட்டர் பக்கத்தில் பிரபாஷுக்கு சர்பிரைஸாக இப்படத்தின் போஸ்டரை 3டி-ல் வெளிட்டுஅசத்தினார்.

இந்நிலையில், ராதே ஸ்யாம் படம் வெற்றி பெற வேண்டுமென பலரும்வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version