பிக்பாஸ்ஸில் கமல் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கும் ரசிகர்கள்!

பிக்பாஸ்ஸின் இந்த சீசன் போட்டியாளர்கள் செய்யும் பல செயல்கள் மீது கமல் இன்னும் அழுத்தம் கொடுத்து கண்டிக்காமல் மென்மையான விசாரணையை மட்டுமே மேற்கொள்கிறார் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.

பிக்பாஸ்ஸின் நான்காவது சீசன் முந்திய சீசன்களை போல பரபரப்பாக இல்லாமல் தொய்வாக இருக்கிறது என்பது சோஷியல் மீடியாவில் பலரும் வைக்கும் விமர்சனம்.

சுவாரஸ்யம் இல்லாத போட்டியாளர்கள் தேர்வு ஒரு பக்கம் என்றால் இவர்களது செயல்களை தொகுப்பாளராக கமல்ஹாசன் முந்தைய சீசன்களை போல அழுத்தமாக கண்டிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது பரவலாக எழுந்துள்ளது.

இந்த சீசனில் பல இடங்களில் பாலா எல்லை மீறிய வார்த்தைகளை உபயோகித்தது, தறுதலை என்ற வார்த்தையை உபயோகித்தது, இன்னும் வெளியே வராத ஜித்தன் ரமேஷ், தங்களை இன்னும் அதிகம் வெளிப்படுத்தாமல் இருக்கும் ஷிவானி, கேபி, ஆஜீத் இவர்களை கமல் இன்னும் அழுத்தம் கொடுத்து கண்டிக்காமல் மென்மையான விசாரணையை மட்டுமே மேற்கொள்கிறார் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.

READ ALSO- மீண்டும் இணையும் விக்ரம்-ஹரி கூட்டணி?

தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 4-ஐ தொகுத்து வழங்கும் நாகர்ஜூனா போட்டியாளர்களின் தவறுகளை வெளுத்து வாங்குகிறார் எனவும் ஆனால், இந்த சீசனில் கமல் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கவில்லை எனவும் விமர்சனஙகள் ரசிகர்கள் தரப்பில் இருந்து எழுந்துள்ளது.

Exit mobile version