‘நான் நல்லவன்னு சொல்றவனை நம்பவே கூடாது’- பாலா VS ஆரி! #BiggbossPromo1

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோவில் கால் செண்டர் டாஸ்க் மீண்டும் வந்திருக்கிறது. பாலா VS ஆரி என சூடு பிடிக்கிறது விவாதம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. கடந்த வாரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கால் செண்டர் டாஸ்க் மீண்டும் இந்த வாரம் தொடங்கியுள்ளது. இதில் முதல் கால் ஆரிக்கு பாலா செய்கிறார். 

‘யாரையும் காலி பண்ணி விளையாடனும்னு இல்ல. எல்லாரும் விளையாட வாங்க. எனக்கு அந்த மைம்ட் செட்தான்ன்னு சொல்லக்கூடியவர் ஆரி.

ஆனா, நீங்கதான் எல்லாரையும் காலி பண்ணி விளையாடறீங்க. நான் கெட்டவன்னு சொல்றவனை நம்பலாம். நல்லவன்னு சொல்றவனையும் நம்ப்லாம். ஆனா நான் மட்டும் தான் நல்லவன்னு சொல்றவனை மட்டும் நம்பவே கூடாது’ என பாலா சொல்ல ஆரி அந்த பக்கம் சிரித்து கொண்டே கேட்கிறார்.

பாலாவின் கேள்விகளுக்கு ஆரியின் பதில் என்ன? இதன் மூலம் மீண்டும் அவர்களுக்கு இடையில் பிரச்சனைகள் தொடங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Exit mobile version