கால் செண்டர் டாஸ்க்கில் போட்டியாளர்களின் செயல்பாடுகள் அடிப்படையில் ரேங்க்கிங் தர வேண்டும் என்பதுதான் புரோமோவில் ஹைலைட் ஆகியுள்ளது. இதில் பாலாவின் கேள்விதான் விவாதத்தை கிளப்பியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. இதில் கால் செண்டர் டாஸ்க் முடிவடைந்து விட இதில் சிறப்பாக செயல்பட்டவர்கள், குறைவான ஈடுபாடு காட்டியவர்கள் எனும் அடிப்படையில் இந்த ரேங்க்கிங் இருக்க வேண்டும் என டாஸ்க் அமைந்துள்ளது.
புரோமோவில் காட்டியுள்ளபடி ஆரிக்கு முதலிடம், அனிதா இரண்டாம் இடம், பாலா மூன்றாம் இடம், ரம்யா நான்கு, ரியோ ஐந்து, ரமேஷ் 8, கேபி 11ம் இடத்தில் இருக்கிறார்கள். இதுமட்டுமில்லாமல் இவர்கள் தங்களுடைய ரேங்கிற்காக தங்கள் செயல்பட்டதை முன் வைத்து விவாதமும் செய்யலாம்.
இதனால், அர்ச்சனா, தொடர்ந்து ஒருவரை தூண்டிவிட்டு கேள்விகள் கேட்பது கஷ்டம் என சொல்ல அடுத்து கேபி, கால் கட் செய்தது பற்றி பேசுகிறார். பாலாவோ, ‘நான் ஏன் மொக்க கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லனும்? நானும் கால் கட் பண்ணியிருக்கலாமே?’ என கேட்பதோடு புரோமோ முடிகிறது.
READ ALSO- ’வெளிய போடாத ஒரு முகமூடியை போட்டு இருக்கீங்க!’ அனிதா VS ரியோ #BiggbossPromo1
கால் செண்டர் டாஸ்க்கில் ஊழியராகவும் வாடிக்கையாளராகவும் பாலா சிறப்பாகவே செயல்பட்டார் என்ற கமெண்ட்டை அதிகம் சோஷியல் மீடியாவில் பார்க்க முடிந்தது. பொறுத்திருந்து பார்ப்போம், இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கிறது என்று.