பிரபாகரன் வாழ்க்கை வரலாறு படம் “சீறும் புலி” …விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல்

நடிகர் பாபி சிம்ஹா நடித்துள்ள சீறும்புலி என்ற பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுப் படம் விரையில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

நடிகர் விஜய் சேதுபதி,  கிரிக்கெட் ஜாம்பாவான் வாழ்கை வரலாற்றுப் படமான 800-ல்  நடிப்பதாக வெளியான தகவல்களால் தமிழக அரசியல் கட்சிகள், சினிமா கலைஞர்கள், அவர் இப்படத்தில் நடிக்ககூடாது இலங்கைதமிழர்கள் எனப் பல தரப்பினர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

இந்நிலையில் இயக்குநர் ஏ.எம்.ஆர் ரமேஷ் என்பவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்திய எடுக்கவுள்ள வெப் சீரிஸில் நடிக்க அழைப்பு விடுத்தார், பிரபாகரன் வேடத்திற்கு விஜய் சேதுபதி பொருத்தமாக இருப்பார் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில்  விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்று படமான சீறும் புலி விரைவில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

இதில் நடிகர் பாபிசிம்ஹா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version