முன்னணி நடிகை மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு !

நடிகை கங்கனா ரனாவத் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு.

பாலிவுட் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத்,வேளான் மசோதாக்களுக்கு எதிராகப் போராடியவர்களை பயங்கரவாதிகள் என்று கூறியதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை கங்கனா ரனாவத் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று கூறியதால் அவருக்கு  சிவசேனா கட்சியினர் மிரட்டல் விடுத்தனர்.

இதையடுத்து அவரது மும்பை அலுவலகம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி மும்பை நகராட்சி அதை இடிக்கமுயன்றது. இதையடுத்து நீதிமன்றத்தில் நடிகை மனுதாக்கல் செய்தார். அதனால் மும்பை நகராட்சிக்கு இடைக்காலத் தடை விதித்தது.

அவர்  மும்பை வருவதற்கு ஒய்பிளஸ் பாதுக்காப்பு அளிக்கப்பட்டது.இந்நிலையில் சமீபத்தில் மத்திய அரசால் சட்டமாக்கப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு எதிராகப் போராடியவர்களை பயங்கரவாதிகள் என்று கங்கனா கூறினார்.

இதையெதிர்த்துக் கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தில் தொடரப்பட  வழக்கில் கங்கனா மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version