நடிகை கஸ்தூரியும் யூ டியூப் சேனல் தொடங்கியுள்ளார். அதில் ஒளிப்பரப்பாகியுள்ள முதல் புரமோவை பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப் போயுள்ளனர்.
நடிகை வனிதா, இயக்குநரும் நடிகையுமான லக்ஷ்மி ராமகிருஷ்ணனை வீடியோ நேர்காணலில் தரக்குறைவாக நாகரிகமற்ற முறையில் பேசினார். தன்னிலை மறந்து நடிகை வனிதா நடந்து கொண்ட விதத்தை பார்த்த கஸ்தூரி லக்ஷ்மிக்கு ட்விட்டரில் ஆதரவு தெரிவித்தார்.
இதனை பார்த்து கடுப்பான வனிதா, கஸ்தூரி மீது பாய்ந்தார். கஸ்தூரியை பிராடு, பைத்தியம், காமெடி பீஸ், முட்டாள் என வாய்க்கு வந்தப்படி திட்டி தீர்த்தார். மேலும் தன்னுடைய யூ டியூப் சேனலில் ஷேர் செய்யப்படும் வீடியோக்களுக்கு அதிக வியூஸ் வருகிறது என்பதால் உனக்கு பொறாமை என்றும் போடி வாடி என ஒருமையில் பேசினார்.
இதற்கு பதிலடி கொடுத்த கஸ்தூரி. நான் யூடியூப் சேனல் தொடங்குகிறேன், அதில் கெஸ்ட் இன்ட்டர்வியூஸ் கரண்ட் ‘அஃபையர்ஸ்’ , உண்மை சோதனை / புராணக்கதை மற்றும் வினாடி வினா இடம் பெறும் என்றும் பெயரை செலக்ட் செய்ய உதவுங்கள் என்றும் கூறி வோட்டிங் முறையில் ஆப்ஷன் கொடுத்தார். இதில் கனெக்ட் வித் கஸ்தூரி என்ற பெயருக்கு அதிக ஓட்டு கிடைத்ததால் அந்த பெயரிலேயே யூ டியூப் சேனல் தொடங்கியிருக்கிறார் கஸ்தூரி.
கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், யூ டியூப் சேனலின் முதல் நிகழ்ச்சி குறித்த புரமோவை ஷேர் செய்துள்ளார். மேலும் முதல் நேர்காணல் எதைப்பற்றியதாக இருக்கும் என யூகியுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
அதில் பீட்டர் பாலின் புரடெக்ஷன் அலுவலகத்தில் வனிதா எப்படி என்ட்ரி கொடுத்தாரோ அதே போல கேரியருடன் என்ட்ரி கொடுத்து மிரட்டியிருக்கிறார் கஸ்தூரி. மேலும் பீட்டர் பாலின் அலுவலகம் என கூறப்பட்ட ரேர் பினாமினன் அலுவலகத்தில் எங்கு பீட்டர் பாலுக்கு வனிதா பரிமாறினாரோ அங்கு கஸ்தூரியும் அந்த அலுவலகத்தை சேர்ந்த ஒருவருக்கு பரிமாறுகிறார்.
மேலும் அவர்தானே நேத்து இங்க சாப்பிட்டார் என்றும், இதில் நிறைய குழப்பம் உள்ளது. அந்த வரலாற்று புகழ் பெற்ற இடத்திலேயே உட்காந்து பேசலாமா என கேட்டு வனிதாவும் பீட்டர் பாலும் பேசிய இடத்திற்கு செல்கிறார் கஸ்தூரி. இப்படியாக முடிகிறது அந்த வீடியோ.
இதனை பார்த்த ரசிகர்கள், இன்னும் பல தரமான சம்பவங்களுக்கு காத்திருக்கிறோம் என தங்களின் ஆர்வத்தை பகிர்ந்துள்ளனர்.