“சி.எஸ்.கே சிங்கங்களா’’ – சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு சிலம்பரசனின் வாழ்த்து!!

சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்க உருவாகிவரும் ‘கொரோனா குமார் ‘ திரைப்படக் குழு சார்பில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கொரோனா குமார் திரைப்படத்தை ரௌத்திரம் படத்தின்மூலம் இயக்குநராக அறிமுகமான கோகுல் இயக்க, ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். கொரோனா குமார் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சி.எஸ்.கே சிங்கங்களா என்ற பாடல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. தல தோனி மற்றும் சி.எஸ்.கே அணியின் தீவிர ரசிகரான சிம்புவும் இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்.

இதற்குமுன்பே சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் சி.எஸ்.கே அணியின் மஞ்சள் நிற ஜெர்சி அணிந்த புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version