விக்ரம் தற்போது தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து கொண்டு வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பானது விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது. பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசை மெட்டுகளை கோர்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடிக்கின்றனர். ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஒத்திகையின் போது நடிகர் விக்ரமுக்கு காயம் ஏற்பட்டு அவரின் விலா எலும்பு முறிந்ததனால் விக்ரம் சிறிது காலம் படப்பிடிப்பில் இருந்து ஓய்வில் இருந்தார். தொடர்ந்து ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்காக நடிகர் விக்ரமிற்கு மேக்கப் போடும் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோவில் பெரிய முடி மற்றும் தாடியுடன் விக்ரம், ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கிறார். இந்த புதிய லுக் தற்போது வைரல் ஆகியுள்ளது.
வைரல் ஆகிவரும் தங்கலான் படத்தின் புதிய புகைப்படம்
-
By mukesh

Related Content
தமிழகத்தில் சாலை விரிவாக்கத்துக்கு புதிய திட்டம்; 182 கோரிக்கைகளுக்கு விரிவான திட்ட அறிக்கை!
By
daniel
August 31, 2026
பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் நிவாரணம்; கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு!
By
daniel
August 31, 2026
ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!
By
daniel
August 31, 2026
“ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டில் சட்டமன்றம் உள்ளது” — எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
By
daniel
August 30, 2026
நேபாளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் மீட்பு!
By
daniel
August 30, 2026