இந்தி, தெலுங்கு, மலையாளத்தை தொடர்ந்து தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 4 சீசன்களை தொடர்ந்து 5வது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் காத்துக்கிடந்தனர். கடந்த சில வாரங்களாகவே அதற்கான புரோமோக்களை விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பி வந்தது. இந்நிலையில் இன்று முதல் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களின் பட்டியல் இதோ….
முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தது கானா பாடகி இசைவாணி, திருநங்கையும், மாடல் அழகியுமான அக்ஷரா ரெட்டி, மாடல் அழகியான நமீதா மாரிமுத்து, மலேசியாவைச் சேர்ந்த டிக்டாக் பிரபலமான நதியா, நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி, நடிகர் வருண், ராப் பாடகியான ஐக்கி பெரி, விஜய் டி.வி. தொகுப்பாளியான பிரியங்கா தேஷ்பாண்டே, சீரியல் நடிகை பவானி ரெட்டி, நடிகர்கள் அபினய் வட்டி, வருண், நிரூப் நந்தகுமார், மாஸ்டர் பட நடிகர் சிபி சந்திரன், நாடக கலைஞரான தாமரைச் செல்வி, மாடல் அழகி ஸ்ருதி ஜெயதேவன் என மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை கடந்த 4 சீசன்களிலும் ஆண்களுக்கு சமமான எண்ணிக்கையில் தான் பெண் போட்டியாளர்கள் களமிறக்கப்படுவார்கள். ஆனால் எந்த சீசனிலும் இல்லாத வகையில் பிக்பாஸ் சீசன் 5யில் 7 ஆன் போட்டியாளர்கள், 10 பெண் போட்டியாளர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 18 பேர் பங்கேற்றுள்ளனர். இந்த முறை நடந்துள்ள அதிரடி மாற்றத்தைப் போலவே சர்ச்சைக்கும், சண்டைகளுக்கும் பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
