‘கர்ணன்’ ஏப்ரலில் திரைக்கு வருகிறான் : இயக்குநர் மாரி செல்வராஜ் அறிவிப்பு..!

‘கர்ணன்’ ஏப்ரலில் திரைக்கு வருகிறான் என இயக்குநர் மாரி செல்வராஜ் அறிவித்துள்ளார்.

தனுஷின் 41-வது படமான ‘கர்ணன்’ திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். தாணு தயாரித்துள்ள இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். யோகிபாபு, லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளர்.

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது. இந்நிலையில், ஒரு மாஸான மோஷன் போஸ்டருடன், ’கர்ணன்’ திரைப்படம் ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட்டை  இயக்குனர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ளார்.

https://twitter.com/mari_selvaraj/status/1355750241073414146?s=20

ஏப்ரல் மாதத்தில் ‘கர்ணன்’ படம் திரைக்கு வரவுள்ளதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ‘நீதி சூரியனைப் போல முளைத்தெழக்கூடியது. வரும் ஏப்ரலில் திரைக்கு வருகிறான் ‘கர்ணன்’ என அவர் பதிவிட்டுள்ளார். ட்விட்டரில் ‘வாள் தூக்கி நின்னான் பாரு, வந்து சண்டபோட்ட எவனும் இல்ல’ என பதிவிட்டுள்ளார்.  

Exit mobile version