19 வயதில் லஷ்மி ராமகிருஷ்ணன் இளமை மாறாமல் 50 வயதிலும் இருப்பதாக சமூகவலைத்தளங்களில் பரவி வரும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.
இப்படத்தில் சசிகுமார் அம்மாவாக நடித்து இவர் கண்கலங்கி நடிக்கும் காட்சிகள் பெரும் ரசிகர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. வேட்டைக்காரன் படத்தில் ரவியின் அம்மாவாகவும் சென்னையில் ஒருநாள் படத்தில் கார்த்திக்கு அம்மாவாக நடித்துள்ளார்.
திரைப்படங்களில் இவர் பிரபலமானதைவிட சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் நிகழ்ச்சியில் கேட்கும் கேள்விகள் மற்றும் அதற்கு இவர் கொடுக்கும் ரியாக்ஷன் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
அடிக்கடி உச்சரிக்கும் போலீசை கூப்பிடுவேன் என கூறும் வசனம் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. லட்சுமி ராமகிருஷ்ணன் 1984ம் ஆண்டு எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த சில ரசிகர்கள் 50 வயது ஆனாலும் அப்போது இருந்தபடியே இப்போதும் சும்மா கும்முனு இருக்கிறீர்கள் என சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.