இந்தி நல்ல மொழி; இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள்: சுஹாசினி கருத்து..!!

suhasini
suhasini

இந்தி ஒரு நல்ல மொழி என்பதால் நாம் அதனை கற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரபல திரைப்பட நடிகை சுஹாசினி தெரிவித்துள்ளார்.

சென்னையிலுள்ள பிரபல தங்க நகைக் கடையில் அட்சய திருதியை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்கு நடிகையும் இயக்குநருமான சுஹாசினி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரிடம் இந்தி மொழி மற்றும் படங்களுக்கு தேசியளவில் கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சுஹாசினி, நடிகர்களுக்கு அனைத்து மொழிகளும் தெரியவேண்டும். மொழிகளை மதிப்பதும் மிகவும் முக்கியம். இந்தி நல்ல மொழி, அதை கற்றுக்கொள்ள வேண்டும். இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள், அவர்களுடன் பேசும் தேவை ஏற்பட்டால், இந்தியை கற்றுக்கொள்ளலாம். தமிழர்களும் நல்லவர்கள் தான், அவர்களுடன் தமிழில் பேசினால் மகிழ்ச்சி அடைவார்கள் என்று சுஹாசினி தெரிவித்தார்.

Exit mobile version