‘தி லெஜண்ட்’ பட ஹீரோயினுக்கு இவ்வளவு சம்பளமா!

தி லெஜண்ட் திரைப்படம் தமிழ்,மலையாளம், தெலுங்கு, கன்னடம் & இந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக கடந்த வியாழக்கிழமை வெளியானது.

சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் சரவணன் தயாரித்து நடித்த இந்த படத்தை இயக்குநர் ஜெ.டி.ஜெர்ரி இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். தமிழகம் முழுவதும் 800 திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மிக மோசமான திரைப்படம், மேக்கிங்கில் சொதப்பியுள்ளனர். அண்ணாச்சிக்கு நடிப்பு வரலை என கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தில் நடித்த நடிகை ஊர்வசி ரவுத்தாலின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை மாடல் அழகியான அவர், ‘தி லெஜண்ட்’ படத்தில் நடித்ததற்காக ₹20 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது. தற்போது சுசிகணேசன் இயக்கி வரும்  ‘தில் ஹை கிரே’ என்ற பாலிவுட் படத்தில் அவர் நடித்து வருகிறார்.

Exit mobile version