சூரியாவின் ஜெய்பீம் திரைப்படம் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் நடக்கும் இந்திய திரைப்பட விழாவில் திரையிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீதியரசர் சந்துருவின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் ஜெய்பீம். இயக்குநர் ஞானவேல் இயக்க சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்தது. படத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ்ராஜ், குரு சோமசுந்தரம், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான நிலையில் சமூகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த சூரரைப்போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை வென்ற நிலையில் ஜெம்பீம் திரைப்படமும் தேசிய விருதுபெரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இப்படத்திற்கு மேலும் ஒரு மணிமகுடமாக (கவுரவமாக) ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் நடக்கும் இந்திய திரைப்பட விழாவில் ஜெய்பீம் திரையிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
