பொன்னியின் செல்வன் 1 படத்தின் முதல்பாடல் ‘பொன்னிநதி’ 5.60 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாடலான பொன்னிநதி பாடல் வெளியாகியுள்ளது.

மனிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன் 1. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் முதல் பாடலான ’பொன்னி நதி’ பாடல் வெளியாகியுள்ளது.

இளங்கோ கிருஷ்ணனின் வரிகளில் ஏ.ஆர்.ரகுமான், ஏ.ஆர்.ரஹைனா மற்றும் பம்பா பாக்யா ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர். பாடல் வெளியான சிறிது நேரத்திலேயே 5.60 லட்சத்திற்கும் மேலான பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

-பா.ஈ.பரசுராமன்.

Exit mobile version