விருமன் திரைப்படத்தின் வசூல் முதல் நாளை விட இரண்டாம் நாள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முத்தையா இயக்கத்தில், நடிகர் கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியான திரைப்படம் விருமன். சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்டு 12ம் தேதி) தமிழகம் முழுவதும் 475 திரையரங்குகளில் வெளியானது.
முதல் நாளில் ₹8.20 கோடி வசூல் ஆன நிலையில் இரண்டாம் நாளான நேற்று ₹8.45கோடி வசூல் ஆகியுள்ளது. ஒட்டுமொத்தமாக ₹16.65 கோடி வசூலித்துள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் மேலும் வசூலாகும் என்று சினிமா வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
