2002ம் ஆண்டு வெளியான ‘மவுனம் பேசியதே’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் த்ரிஷா. அதன்பிறகு விஜய்,அஜித், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர்.
தற்போது இவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதியும், சதுரங்க வேட்டை 2 திரைப்படம் அக்டோபர் 7ம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில் அவர் அரசியலில் நுழையப்போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 39 வயதாகும் த்ரிஷா காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாக கூறப்படுகிறது. இருப்பினும், த்ரிஷா தரப்பில் இருந்து இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
