வைரலாகும் இளையராஜாவின் வீடியோ

இளையராஜாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இசையமைப்பாளரும், இசைஞானி இளையராஜாவின் மகனுமாகிய யுவன்சங்கர் ராஜா இன்று தனது 43வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் உள்பட பலரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இசைஞானி இளையராஜா யுவன்சங்கர் ராஜா பிறந்த அனுபவத்தையும், அப்போது தான் கம்போஸ் செய்த பாடல் பற்றியும் சுவாரஸ்யமாக கூறும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவின் இறுதியில் யுவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுகிறார்.

இளையராஜா ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை முன்னெடுத்தாலும், யுவன்சங்கர் ராஜா திராவிட சித்தாந்தத்தில் உறுதியாக இருக்கிறார். இந்நிலையில் இளையராஜா வாழ்த்து தெரிவித்துள்ள வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Exit mobile version